0

இருவரும் தாயே:-




குமாரி மனசுக்குள் அழது தீர்த்தால்.அம்மா,அம்மா மகன் அழைத்தும்,காதில் விழுந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தால்.நம் வாழ்வில் இவனை       மட்டுமே பிரதானம் என நினைத்தோமே.ஆனால் அந்த பேச்சாளர் சொன்னதும் சரிதானே.
                     ஒரு தாயின் இடத்தை மனைவி நிரப்ப முடியும்.மணைவி இடத்தை தாய் நிரப்ப முடியாது.என் புருசனை விட இவன் தான் உசுருன்னும்,இவன் தான் எல்லாமும்ன்னு இல்லை இவனுக்காகவே வாழ்ந்தேன்.அவரகூட விட்டு ,விட்டு இவன் படிப்புகாக இவன் பின்னால் வந்தேன்.
                      அம்மா எனக்கு பிரமேசன் கிடச்சி இருக்கு.இந்த சந்தோசத்தை கொண்டாட நானும், அவளும்  தங்கினான் சுரேஸ்.{நிச்சயம் ஆகி கல்யாத்திற்கு காத்து இருக்கும் ஜோடி} 
           போயிட்டு வாடா அப்படியே கிப்ட் ஏதும் வாங்கி கொடுத்துட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு வா.நான் வெளியில் போறேன்.குமாரி கோவில் தோழி ஒருத்தி கொடுத்த முதியோர் இல்லம் போய் விபரம் கேட்க கிளம்பினால்.
            குமாரி வீட்டை பூட்டும் நேரம் வண்டி சத்தம் கேட்டது.மருமகள்{வரபோரவள்},மகன் இருவரும் வந்தனர்.மாமி அவருக்கு பிரமோசன் கிடச்சி இருக்காம்.வீட்டில் ஏதாவது சுவீட் செய்து சாப்பிடுவோம்.கார் லோன் போட்டு கார் வாங்கியதும் எல்லோரும் வெளியில் போய் வருவோம்.மாமா எங்கே.
            குமாரி அழதால், மருமகள் கையை பிடித்து கொண்டு.உள்ளே நுழைந்த அவள் கணவர் உட்பட யாருக்கும் புரியலை.என்ன நடகிறது என்று.
         அன்பே கடவுள்
 கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.
0

மனிதம் :-



நரேன் ரயில் நிலையம் கடந்து போகும் போது எல்லாம். ஒரு கிழவி சாமி தர்ம துறை என்பால் இவனும் ஒரு ரூபாய் போட்டு போவான்.இன்று மாலை இரயில் ஏறியதும் நினைத்தான் அந்த குரல் சமீபமா கேட்கவே இல்லையே.நாமும் காசு தரலை.இருக்காளா,போயிட்டாலா ?
                சாமி தர்ம துறை திடுக்கிட்டவன் உணர்ந்தான் 3 நாள் முன் நினைத்தோம்.பிறகு மறந்தே போனோம்.கிழவி பக்கத்தில் போய் இத்தனை நாள் எங்க போன.
              இங்க தான் சாமி இருக்கேன்.
               பின் ஏன் கூப்பிடலை.
சாமி நீங்களே பொண்டாட்டி ஊருக்கு போன வருத்ததில் இருக்கும் போது நான் ஏன் சங்கட படுத்தனும்ன்னு தான்.
            உனக்கு எப்படி தெரியும்.
 கையில் சாப்பாட்டு பையும்,முகத்தில் புது பொலிவும் 8 நாளா காணலையே சாமி.
                     10 ரூபாய் கொடுத்தான்,பிச்சை எடுக்கும் கிழவிக்கு எவ்வளவு கவனம் ,திறமை,மனிதாபிமானம்.மனிதம் மனதில் இருகிறது.பணத்திலோ,படிப்பிலோ இல்லை.

                                         அன்பே கடவுள்
                                                                  கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.


0

எஜமானனா ! வேலைக்காரனா





          பொரும் முழுமையாக படியும், தியானம் என்பதை பார்த்ததும் விழியை நகர்த்தி விட்டால், பிறகு வருத்தம் உமக்கு தான் எமக்கு அல்ல.

          தியானம் ஏன் ?
மன நிம்மதியை அடைவதற்கு தான் தியானம் .
மன நிம்மதி எப்படி போகும். ? மன நிம்மதியை நாம் தேடுகிறோம் என்றால் இருந்த ஒன்றை இழந்து விட்டோம் அது தான் மீண்டும் தோடுகிறோம். சரியா ?

எப்படி இழந்தோம் ?
           கடன் பட்டவர்கள், குடிகாரார், அல்லது குடிகாரரின் குடும்பம்,வேலை இல்லாதவர்கள்,படிக்காமல் ஊர் சுற்றுபவர்,அல்லது சுற்றியவர்.நிரந்தர நோயாளி,தினமும் வீட்டில் சண்டையிடும் குடும்பம்.இவை நம்மால் உருவக்கப்பட்டவை{இவை சரியா,ஏன் இது பற்றி வேறு கலத்தில் பார்ப்போம்}.

          இங்கு இவைகளை ஒரு பிரச்சனையாக கொள்வோம்.இப்போது இதை சமாளிக்க போவது நாம் தான். சமாளிக்கிறோம்,பிறகு ஏன் கவலை,புலம்பல்.சரி.சமாளிக்க முடிய வில்லை,வழியும் தெரிய வில்லை.கவலை படுவதால் சரியாகும் என்றால் சரி,அதுவும் இல்லை,பிறகு ஏன் கவலை.

              ஆக, பிரச்சனை சமாளிக்க முடிந்தால் கவலை வேண்டாம்.
முடிய வில்லை கவலை வேண்டாம். கவலை என்பது வேறு. சரியா ?
அதற்கான தீர்வு பற்றி நினைப்பது வேறு.

 பிரச்சனைக்கான தீர்வுக்காய் செய்ய வேண்டியவை யாவை ?
1.       பிரச்சனையை சமாளிக்க வழிகள் என்ன ?என்ன.
2.       பிரச்சனை அதிக பச்சம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.
3.       பிரச்சனை விளைவால் ஏற்படும்  பாதிப்பை சமாளித்தால் போதுமா.
  சரி எதுவும் முடியாது என்ன செய்ய. எதுவும் முடியாத போது கவலை படவும் முடியாது என்று கவலையும் சேர்த்து விட்டு விடவும்.சரியா!.

                இப்போது அப்படி எல்லாம் விட முடியாது என்று படாத பாடு படுத்தும் மனதை அமைதி படுத்த அந்த அமைதின் மூலம் ஓர் தீர்வு காண தான்

                 தியானம்

இப்போது தியானம் என்றால் என்ன பார்ப்போம்.
   மனம் இது அனைவருக்கும் உள்ள ஒன்று. அது ஒரு வேலைக்காரன் தெரியமா ?
  ஓ தெரியுமா

ஆனால் அதற்கான எஜமான் யார் ?அது தான் தெரியாது.
சரி விடும்.அது தான்        
               நாம் என்கிற சுயம்.
எஜமானன் பலம் குன்றி இருப்பதால் அல்லது காணாமல் போயிருப்பதால் வேலைக்காரன் ஆட்டம் போடுகிறான்.
இப்போது வேலைக்காரனை அடித்து விரட்ட கூடாது.அவன் நமக்கு வேண்டும் கண்டிப்பாய்.அவன் கொட்டத்தை அடக்கினால் போதும்.அது தான் தியானம்.

         எஜமானன் இழந்ததை, அதன் பலத்தை மீட்டு எடுக்க வேண்டும்.அது தான் தியானம்.
கொட்டத்தை அடக்கி நம் பலத்தை காட்டி, அவனை வேலை செய்ய வைக்க வேண்டும் அதுவே தியானம்.
 மனம் என்னும் வேலைக்காரன் கூச்சலிட்டு கொண்டே, புலம்பி கொண்டே இருந்து.எஜமானனை கவலை சங்கிலியால் கட்டி விடுகிறான்.

      தற்போது அவனை கட்டுபடுத்த வேண்டும்.எஜமானன் என்று நான் உள்ளேன். என்பதை உணர்த்த வேண்டும்.நம்மை கவனிக்க வைக்க வேண்டும்.பிறகு நாம் சொல்வதை கேட்க வைக்க வேண்டும்.இவை தான்

                 தியானம் 

தியானம் ஏன்,தியானம் என்றால் என்ன தெரிந்து விட்டது.அதை எப்படி செய்வது. மிக சுலபம் முதலில் வேலைகாரனை{மனம்} கவனிக்க ஆரம்பிக்கவும்.இவ்வளவு நாள் வேலைகாரனோடு ஒன்றி இருந்த எஜமானனுக்கு{நாம்} அவனுடன் தொடர்ந்து போக தோன்றும்.கூடாது.நாம் விருப்பு, வெருப்பு அற்று நமது எண்ணங்களை கவனிக்கலாம்.அல்லது அப்படியே விட்டு விடலாம்.

   தியானம் மேற்கொள்ள நம் உடல் மற்றும் மனம் சம்பந்த பட்ட செயல்களை நிருத்த வேண்டும்முதலில்.முதலில் உடல் இயக்கத்தை நிருத்தி புவியீர்ப்பு விசையின் நேரடி தாக்குதலை தவிர்க்க ஏதோ ஒரு தடுப்பை பயன் படுத்தி{மெத்தை,கணத்ததுணி,போர்வை. இவைகளை போன்று வெள்ளை அல்லது வெளிர் நிறமாக இருத்தல் நல்லது.படுத்து உறங்க பயன்படுத்தாத பொருளாக இருக்க வேண்டும்}அதில் அமைதியாக அமர்வதே தியானத்தின் முதல் நிலை.

        இரண்டாம் நிலை எந்த மந்திரமும் சொல்ல வேண்டாம்.அமைதியாக கண்ணை மூடி அமர்வதால் பல எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும். அது இருக்கட்டும் நாம் செய்ய வேண்டியது.நமது மூச்சி காற்றை கவனிக்க வேண்டும்.{ நாமாக மூச்சை இழுத்து விட வேண்டாம்.இயற்கையாய் நடப்பதை கவனித்தால் போதும்}

    இப்போது உங்கள் எண்ணங்கள் உங்களுக்குள் சில 50,அல்லது 100,அல்லது 150 அட மிக,மிக, அதிகமாக எவ்வளவு எண்ணங்கள் உருவாகும் ?.முக்கியாமான ஒன்று.அப்படி எழும் எண்ணங்களுக்கு பதில் தேட வேண்டாம்.இரண்டாவது அதை பொருட்படுத்த வேண்டாம்.அந்த எண்ணங்கள் திறக்காத வீட்டின் கதவை தட்டிய நபர் போல் போய் விடும்.காலங்கள் செல்ல, செல்ல எண்ணங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் {முக்கயமான விசயம் எண்ணங்கள் பற்றியோ,அவற்றின் எண்ணிக்கை பற்றியோ குறிப்பாக அவை  குறைகிறதா என்பது பற்றியோ கவனம் கொள்ள கூடாது.} எண்ணங்கள் கூடுகிறதா குறைகிறாதா என்பதை நீங்கள் கவனிக்க தேவை இல்லை.நீங்கள் கவனிக்க வேண்டியது உமது மூச்சி காற்றின் இயற்கையான நிலையைதான். அதுவும் குறைய ஆரம்பிக்கும். நெற்றி புள்ளியில் ஒரு புள்ளியாய் ஒடுங்கும். சமாதி நிலை அல்லது முக்தி நிலை என்பது இதை தான். 

    நாம் ஒளி பிரவாகமாய், எண்ண சக்திகளின் கூட்டாய், நினைத்ததை செய்யும் ஆற்றல் கொண்டவராய், பிரபஞ்ச சக்தியாய் மாறுவோம். இது உன்னாலும் என்னாலும் முடியும் தோழா. முயல்வோம் இன்றே.
                                          அன்பே கடவுள்
                        கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.
0

}“Facebook




           உண்மையில் நான் யார் {உன்னில்} பப்ளு”?.. அவள் என்னிடம் கேட்கும் போது.என் மனம் தவியாய்த் தவித்தது.
அவள் யார்?. சினிமாவில் காட்டுவது போல் என் நினைவுகள் வட்ட வட்டமாகச் சென்றது.
               என் காதலியா நாற்பத்து எட்டு வயதுஅவளுக்கு. என் காதலியாக முடியுமா.?!”முப்பது வயதுகிறுக்கனான எனக்குத் தோழியா?, ம்கூம்..! ஏதோ ஒன்று,எனக்கும் அவளுக்கும் இடையில் சிக்கித் தவித்தது. அவளிடம் பேசாத நிமிடங்களில் பேதலித்தது உள்ளம்.
                                  பப்ளு”!! என் மகன் தவிக்க வேண்டிய வயதில்.,, எனக்கு, இந்த தவிப்பு, புத்தியில் குழப்பம், மனதில் கலகம், வயிற்றில் பட்டாம் பூச்சி. எனக்கும் அவளுக்கும் இடையில், நினைவற்ற நிமிடங்களே இல்லை. தூக்கத்தில் கனவாய், விழித்து இருக்கையில் நினைவாய் வாட்டியது அவள் எண்ணம். இல்லை, இல்லை அவளை நினைக்கையில் மனம் குறுகுறு என்றது. மண்டையில் மத மதப்பு, வயிற்றில் சுறு சுறு என ஒரு சுகமான இரசாயன கலவை அதிகம் சுரந்து சுகம் தந்தது.
                 அவள் தான் அழைக்கிறாளோ. ஓடிச் சென்று போனைஎடுக்கவும் இசை வழிந்தது. என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனது. எப்படி போன்வரும் முன் அவள் அழைப்பது தெரிந்தது, எனக்கு! நானே பெருமை பட்டுக் கொண்டேன். அவளின் பப்ளு வணக்கம்டாஎன்ற சொல்லில் கரைந்து விட்டேன். நான் எங்கே? என்னை தேடுகையில் அவள் சிரிப்பில் சிதறி, காற்றில் கலந்து, சுவாசமாய் மாறி, அவள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தேன்.
                  இப்போது நான் வழிந்தேன்.. குட்டிமா..!! குட்டிமா”, நாம பார்க்கும் போது சினிமாவுக்கு போகலாமா? ம்கூம்...!! அவள் அழுத்தமாகக் கொஞ்சினாள். அவ்வப்போது அவள் வயதை நினைவுறுத்துவாள். பார்க்க சத்தியமாய் முப்பது, முப்பத்தியொன்னுதான் சொல்லலாம் என என் நண்பன் சொன்னான்..அவன் பார்த்து விட்டான் அவளை. ஒருவன் சொன்னான், ”ஏன்டா அவள் இளமையா தெரிந்தாலும்.கிழவிதானே. கெழவிகிட்ட என்ன பேச்சி”... யார் என்ன சொன்னாலும் அவளை தவிர்க்க என்னால் முடியாது.

அவளிடம் ஒரு கவிதை எழுத சொன்னேன்.
பேனா:-
ஒவ்வொரு போட்டிக்கும்
 ஒவ்வொரு பேனா.

 பல பரிசுகலாய்
 ஆசிரியர் தந்த போது
 கசந்த பேனா.


 இன்று

எண்ணத்தின் வெளிப்பாடாய்
 லட்சியத்தின் நினைவுறுத்தலாய்.

எண்ண பதிவுகளை ஏற்றதாய்
 முக்கிய கையெழுத்து பதிப்பாய்.

முகவரிக் கோட்டையில்
 முதலில் நிற்பதாய்.

ஆட்டோ கிராப்பில்
 ஆடி சிரிப்பதாய்.

வாழ்வின் எல்லை வரை
 என்னுடன் இருப்பதாய்.

இவ்வளவு உயர்ந்த பரிசாய்
தெரிந்தது நீ எனக்கு தந்த பேனா.

                      அவளுக்கு ஒரு பேனா அனுப்பி இருந்தேன்.எத்துனை அழகாய் சொல்லி விட்டால் அதை
                இன்னும் ஒரு வாரத்தில் நான் அவளைப் பார்க்கப் போகிறேன் . சூரியன் கரங்களும், சந்திரன் கரங்களும், எத்துனை முறை மாறி, மாறி என்னை தழுவியதோ..?! கணக்கற்று கனவில் மிதந்தேன். நாட்காட்டி கூட எனக்காய் அழுதது., தினம் உதிரும் என்னை மொத்தமாய் உதிர்த்தாயேடா மடையா.{அவளை பார்க்கும் நாள் வரை மொத்தமாய் கிழித்து விட்டேன்.}
                               பேஸ்புக்ல் உதித்த உறவில்ஹைய் சொன்னது  முதல் இன்று வரை மீண்டும் அசை போட்டது உள்ளம். நேரில் பார்க்கையில்நேந்துவிட்டகோழி ஆவேனோ.,! அவளுக்கும் எனக்கும் ஆன நிலைப்பாடு என்ன.? போனில் பேசிய பேச்சி, ”ஸ்கைப் ல் கண்ட காட்சி நேரில் கண்டதும் தொடருமா..!!?..காதலில் முடியுமா,நட்பாய் மலருமா.அவள் என்ன சொல்வாள்...

அன்பே கடவுள்
கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.




About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes